2020 நாடாளுமன்றத் தேர்தல் : வேட்பு மனுத் தாக்கல் செய்தது ஈழ மக்கள் ஜனநாயக கட்சி!
 Thursday, March 19th, 2020
        
                    Thursday, March 19th, 2020
            
 2020 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பு மனுவை ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தாக்கல் செய்யதது.
 குறித்த வேட்பு மனுக்கள் யாழ்.மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் தாக்கல் செய்யப்பட்டது.
 ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
 இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா –
கடந்த நல்லாட்சி காலத்தில் பலவகையிலும் ஏமாற்றமடைந்த மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மீதான நம்பிக்கையுடன் இத்தேர்தலை எதிர்கொள்ளக் காத்திருக்கின்றார்கள்.
தொடர்ச்சியாக நாம் வலியுறுத்திவரும் மூன்று பிரதான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அரசியல் உரிமைக்கான தீர்வு,  அபிவிருத்திக்கான தீர்வு, அன்றாட பிரச்சினைக்கான தீர்வு என்ற அடிப்படைக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        