‘13“ கை நழுவிச் செல்ல காரணம் இலங்கையோ இந்தியாவோ அல்ல – தமிழர் தரப்பே தவறிழைத்திருந்தது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Sunday, June 16th, 2024

பொது வேட்பாளர் என்பது அவசியமில்லை என்றே நான் நினைக்கிறேன். அந்த முயற்சியானது தமிழ் மக்களுக்கு பயனற்றது மாத்திரமல்லாது அது பாதிப்பையே ஏற்படுத்தும் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில்அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்..

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

யாராக இருந்தாலும் அதாவது இலங்கை அரசாகவோ, இந்திய அரசாகவோ அன்றி சர்வதேசமாகவோ இருந்தாலும் அவர்கள் தத்தமது நலன்களிலிருந்தே எந்தவொரு பிரச்சினையையும் அணுகுவார்கள். அதுதான் நியதியும் கூட. சர்வதேசத்தின் வாக்குறுதிகள் ஏதாவதொன்று எங்காவது நடைமுறைக்கு வந்திருக்கின்றதா என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனால் நாம் அவர்களை நம்பிக்கொண்டிராது எமக்கு கிடைக்கின்ற வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வதே முக்கியமானதாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர் வினவிய கேள்விக்கு பதிலளித்து கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில் – 

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பில் சிலர் பேசி வருகின்றனர். அதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பேசப்படும் தமிழ் போது வேட்பாளர் விடயம் என்பதும் பொய்யான ஏற்பாடு ஒன்றதான். என்னிலிருந்த அரசியல் அச்சம் காரணமாகவே அன்று பிரபாகரன் இந்த உதிரிகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு மூட்டையாக கூட்டமைப்பு என்ற சாக்குக்கள்  போட்டு கட்டிவிட்டிருந்தார். அது இன்று கட்டவிழ்ந்து திசைக்கொன்றாக உருண்டோடிக் கொண்டிருக்கின்றது.

ஆனால் தற்போது தேர்தல் வரவுள்ளதால் ஐக்கியம் என்ற போர்வைக்குள் தம்மை போர்த்திக்கொள்ள கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுவருகின்றனர். அதற்கான ஏற்பாடே இந்த பொது வேட்பாளர் பேச்சும் இருக்கின்றது.

இதேநேரம் அதலபாதாழத்தில் வீழ்ந்திருந்த நாட்டை பொறுப்பெற்று அதை படிப்படியாக முன்னேற்றம் காணச் செய்துகொண்டிருக்கும் ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளும் செயற்பாடுகளும் சரியானதாகவே இருக்கின்றது என நான் எண்ணுகின்றேன்.

அதேவேளை கடந்தகாலத்தில் எம்மீது பூசப்பட்ட சேறுகள் எல்லாம் தற்போது கழுவப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஏனைய தரப்பினர் போன்று நாம் உருமாற்றி சேறுகளை கழுவிக்கொள்ளவில்லை. நாம் உருமாறாதிருந்தே எமது தூரநோக்கள்ள கொள்கைகளை முன்வைத்து செயற்பட்டு வந்துகொண்டிருக்கின்றோம்.

இதேநேரம் வன்முறைக்கூடாக பிரச்சினைக்கு தீர்வு கடைக்கும் என்ற நம்பிக்கையும் எமக்கு ஒருபோதும் இருந்திருக்கவில்லை. இதை நான் பல சந்தர்ப்பங்களிலும் பொது வெளியில் பகிரங்கமாக கூறிவருகின்றேன்.

நாங்கள் ஆயுதப் போராட்டத்தினை ஆரம்பித்த வேளையில் வட கிழக்கு மலையகம் உள்ளடங்கலாக தமிழ் பேசும் மக்கள் என்ற கோசத்தை முன்வைத்துதான் போராட்டத்தை தொடங்கினோம். இடையில் அந்த போராட்டம் தவறான வழிநடத்தல்கள், அணுகுமுறைகள் காரணமாக பலவீனப்பட்டு திசை திரும்பிவிட்டது.

இந்த நேரத்தில்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் எமது கைகளிற்கு கிடைத்தது. அதனை முதலில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் துரதிஸ்டவசமாக ஈபிடிபியைத் தவிர பொதுவாக ஏனைய தரப்பினர் எல்லோரும் நிராகரித்தார்கள்.

ஈபிடிபி வெளிப்படையாக இதுதான் எமது மக்களிற்கான தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக இருக்குமென்று அன்றிலிருந்து சொல்லி வந்தது.  இதேவேளை வட இலங்கைக்கு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற .

இந்நிலையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க. சஜித் பிரேமதாஸ மற்றும் அனுரகுமார திஸநாயக்கா ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்து சென்றுள்ளனர்.  இன்று அனைத்தும் கைமீறிச்சென்றுவிட்ட நிலையில் 13 ஆ, அதில் பாதியா அல்லது கால்வாசியா என பேசிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அது எமது கைகளில் ஏற்கனவே இருக்கின்றது. அதை கைநழுவ விட்டுவிட்டு  வெட்கம்கெட்டதனமாக தரம்தாழ்ந்து சென்று கேட்பதாகவே இச்செயலை நான் எண்ணுகின்றேன்.

இங்கு ஒரு விடயத்தை நான் கூறி வைக்க வேண்டும். அதாவது  நீண்ட காலத்திற்கு பின்னர் என்னுடைய நண்பர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் நானும் ஒரு நிகழ்வில் அருகருகே அமர்ந்திருந்து உரையாடும் சந்தர்ப்பமொன்று கிடைத்திருந்தது.

அப்பொழுது அன்றே இலங்கை இந்திய ஒப்பந்தத்தை நாம் ஏற்று இருக்கலாம் என்றும்  நாங்கள் எங்கேயோ சென்று இருக்கலாம் எனவும் கூறியிருந்தேன். அதற்கு அவருடைய பதில் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொள்வதாகவே இருந்தது.

உண்மையில் இதனையே அவரும் மனசுக்குள்ளே அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன். அன்று அந்த சட்டம் கொண்டு வரப்பட்ட போது அதில் தவறிழைத்தது  இலங்கையோ இந்திய அரசோ அல்லது சர்வதேசமோ அல்ல. அதில் தமிழர் தரப்பு தான் முழுமையாக தவறிழைத்து கோட்டைவிட்டிருக்கின்றது

இலங்கை இந்தியா ஒப்பந்தத்தோடு தென் இலங்கை ஆட்சியாளர்களின் குணாதிசய ரீதியான மாற்றங்கள் அன்று ஏற்பட்டிருந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்த  தவறிவிட்டோம்.  

இதேவேளை தமிழ் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று கூறும் தர்ப்பினர் பிரச்சினையை தீரா பிரச்சினையாக வைத்திருக்கவேண்டும் என நினைத்தே ஒவ்வொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கின்றனர்.

ஆனால் நாம் அவ்வாறு செயற்படுவதில்லை. எதனையும் தேசிய நல்லிணக்கம் மற்றும் சலசலப்பற்ற பொறிமுறைகளூடாக சாதிக்கலாம் என்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது. அவ்வாறு நாம் பலவற்றை சாதித்தும் காட்டியிரக்கின்றோம். எனவே அடுத்துவரும் காலங்களில் எமக்கு மக்கள் பலம் மேலும் அதிகளவாக கிடைக்கும் பட்சத்தில் இன்னும் அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்டிவிட முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: