ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாட்டில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Monday, September 5th, 2016

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று குருநாகல் மாளிகாபிட்டிய மைதானத்தில் (04) இடம்பெற்றது.

பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகிய மாநாடு மாலை 5.30க்கு நிறைவடைந்தது. குறித்த மாநாட்டுக்கு ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி விடுத்த அழைப்பை ஏற்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா பங்குபற்றியதுடன் ஆசிச்செய்தியையும் வழங்கியிருந்தார்.

மேலும் குறித்த மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் போஷகருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமரும் போஷகருமான டி.எம்.ஜயரத்ன ஆகியோருடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் எம்.பியுமான முத்து சிவலிங்கம், பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆறுமுகன் தொண்டமான், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான பிரபா கணேசன் உள்ளிட்டோருடன்  ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசிம் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 epdp DD

Epdp news

Related posts:


தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை அடுத்த தலைமுறை மீது சுமத்திவிட நாம் தயாரில்லை - டக்ளஸ் தேவானந்தா!
போதைப்பொருள் வியாபாரிகளின் இலக்கு பாடசாலை மாணவர்களாகவே இருக்கிறது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை - கடற்றொழில் - நீர்வேளாண்மையை முன்னகர்த்த மற்றுமொரு முன்னெடுப்பு!