வைத்தீஸ்வராவின் நீண்ட நாள் கனவு நனவாகியது – ஆரம்ப பாடசாலைக்கு அனுமதி!

Friday, January 15th, 2021


யாழ்ப்பாணம் வைத்தீஸவராக் கல்லூரியின் நீண்ட நாள் கனவாக இருந்த ஆரம்ப பாடசாலைக்கான அனுமதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் வழங்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 2021 ஆம் கல்வி ஆண்டிற்கு தரம் இற்கான மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

1913 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இராமகிருஷ்ன மிஷனினால் பராமரிக்கப்பட்ட குறித்த பாடசாலை, கல்விச் செயற்பாடுகளின் அடிப்படையில் யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்க பாடசாலையாக விளங்கி வந்தது.

இந்நிலையில், 1976 ஆம் ஆண்டு அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்பட்ட நிலையில் ஆரம்பப் பாடசாலைக்கான அனுமதி நீக்கப்பட்டதனால் பாரிய பின்னடைவை எதிர்கொண்டது.

இந்நிலையில், பாடசாலைக்கான ஆரம்ப பிரிவை மீண்டும் ஆரம்பிப்பதற்கு 1980 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலை சமூகத்தினால் தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொண்ட போதிலும், குறித்த கோரிக்கை நிறைவேறாத நிலையில் தற்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கைகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிள...
சமூக அக்கறையும் தொலை தூரப் பார்வையும் ஊடகங்களுக்கு இருக்க வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
பலாலி - தமிழக விமான சேயையை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் தி...