வவுனியா கருங்காலிக்குளம் அ.த.க. பாடசாலை, புதுகுளம் மகா வித்தியாலய மெய்வல்லுநர் போட்டிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்திருனராக கலந்து சிறப்பிப்பு!
Tuesday, February 18th, 2020
வவுனியா கருங்காலிக் குளம் அ.த.க. பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியின் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து சிறப்பித்துள்ளார்.
இன்றையதினம் குறித்த விளையாட்டு நிகழ்வுகள் பாடசாலை மைதானத்தில் அதிபர் தலைமையில் நடைபெற்றது.
அத்துடன் வவுனியா புதுகுளம் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டிகளிலும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ்
தேவானந்தா அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வுகளை ஆரம்பித்துவைத்து சிறப்பித்திருந்தார்.
இதனிடையே குறித்த பாடசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு வகுப்பறைகளையும் அமைச்சர் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைதிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்கள் விரும்பும் வகையில் தேர்தலை எதிர்கொள்வோம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து – பாதிக்கப்பட்ட கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கான 3 ஆம் கட்...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மரியாதை நிமிர்த்தம் சந்தித்தார் யாழ் மாவட்ட கட்டளை தளபதி!
|
|
|






