வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினரின் பிரச்சினைக்கு சுமூக தீர்வு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு பயன்!

Monday, December 9th, 2019

வவுனியா அரச – தனியார் போக்குவரத்து துறையினருக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முன்னிலையில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட அரசாங்க செயலகத்தில் இன்று (திங்கட் கிழமை) இடம்பெற்ற இதுதொடர்பான கலந்துரையாடலில் இணைந்த நேர அட்டவணையின் அடிப்படையில் பேருந்துக்களை இயக்குவதற்கு அரச மற்றும் தனியார் பேருந்து சங்கப் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் உருவாக்கப்பட்ட இணைந்த அட்டவணையின் அடிப்படையில் உடனடியாக பேருந்துளை இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால ஆகியோருடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்  மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் உட்பட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Related posts:

நாம் மத்திய அரசுடன் இணைந்து அரசியல் அதிகாரத்தில் இருந்தது மக்களது நலன் சார்ந்த தேவைகளுக்காகவே – டக்ள...
கடந்த 5 ஆண்டுகளில் வடக்கு மாகாணசபையில் எதுவும் நடக்கவில்லை -  நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் த...
சர்வதேச கடல் மற்றும் ஆழ்கடல் கடற்றொழிலை மேலும் ஊக்குவிப்பதற்கு தேசிய நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படும் – ...

சிறுமி சேயா படுகொலை வழக்கு போல் மாணவி வித்தியா படுகொலை வழக்கும் துரிதப்படுத்தப்பட வேண்டும் -  டக்ளஸ...
எமது கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கலைந்துவிடாது பாதுகாத்துத் தாருங்கள் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
ஒன்றிணைந்த செயற்பாடுகளினூடாக பிரதேசத்தின் அபிவிருத்தியை கட்டியெழுப்புவோம் - ஊர்காவற்றுறையில் செயலாளர...