வவுனியாவில் நடைபெற்ற சிறுவர் முதியோர் தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, October 15th, 2017

வவுனியாவில் நடைபெற்ற உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்.

தரணிக்குளம் கணேசா வித்தியாலத்தில் விசேடமாக  மண்டபத்தில்  குறித்த நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.

வவுனியா தரணிக்குளம் கணேசா வித்தியாலயத்தில் நடைபெற்ற வவுனியா மாவட்ட சிறுவர் முதியோர் கௌரவிப்பு நிகழ்வில் சிறப்டபு அதிதிகளில் ஒருவாராக  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

வவுனியா மாவட்டத்தில் தரணிக்களம் மறவன்குளம், சுந்தரபுரம் ஆகிய குடியிருப்புகளை நிறுவி மக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான அடிப்படைத்தேவைகளை பெற்றுக்கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா. இதேபோன்று இன மத மொழி பேதங்களுக்கு அப்பால் வடக்கின் பல பாகங்களிலும் புத்தளம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலும் பல குடியிருப்புகளை நிறுவி மக்களை மீளக்குடியேற்றியிருந்தவர் டக்ளஸ் தேவானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்போது கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன், ஆகியோர் உடனிருந்தனர்

Related posts:

நில மெஹெவர திட்டத்தின் செலவீனங்களுக்கென பொது மக்களிடம் இருந்து நிதி வசூலிப்பு இடம்பெற்றதா? நாடாளுமன்...
"பேசுவது தமிழ் தேசியம் செய்வது கஞ்சா வியாபாராம்" - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்க...
மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுடன் அமைச...

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுதங்கள் மௌனித்திருக்க வேண்டும் - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவான...
மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதைத் தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது- டக்ளஸ் தேவானந்தாசுட்...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...