வழிமுறைக்கு வந்தவர்கள் பொறிமுறைக்கு வரவில்லை – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எமது வழிமுறைக்கு வந்திருந்தாலும்கூட அவர்கள் இன்னும் எமது பொறிமுறைக்கு வரவில்லை என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
பளை – இத்தாவில் பகுதியில் இன்றையதினம் (13) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
கடந்தகாலங்களில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு தமது சுயலாபத்தை முன்னிறுத்திய போலித்தேசியவாதிகள் நாம் முன்னெடுத்த இணக்க அரசியலை இழிவு செய்திருந்தார்கள். ஆனால் அவ்வாறு இழிவாக பேசியவர்கள் இன்று அதே நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதன்மூலம் அவர்களுடைய உண்மை முகங்கள் வெளிப்பட்டுநிற்கின்றது.
நாம் அரசுடன் இணக்க அரசியல் செய்துகொண்டு எமது மக்களுக்கான பல்வேறுபட்ட மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். ஆனால் இன்று இணக்க அரசியல் செய்யும் போலித்தேசியவாதிகள் தமது சுயலாபத்தை முன்னிறுத்தி செயற்பட்டுவருகின்ற அதேவேளை மக்கள் நலன்சார்ந்து எந்தத் திட்டங்களையும் முன்னெடுத்ததாகத் தெரியவில்லை.
இந்நியையில் எந்த இடர்பாடுகள் வந்தபோதிலும் சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகங்கொடுத்து நாம் மக்களுக்கான பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றோம். அவ்வாறே இனியும் முன்னெடுப்போம் என்றும் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|