வடபகுதி முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுபெற்றுத் தருவேன் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!

Tuesday, July 7th, 2020

வடபகுதி “முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளுக்கும் உறுதுணையாக நான் இருப்பேன். தேசிய நல்லிணக்கத்தின் ஊடாக அனைத்து பிரச்சினைகளையும் எதிர்கொண்டு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற நம்பிகையும் எனக்கு உள்ளது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். வர்த்தக முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த வர்த்தக ரீதியிலான முதலீட்டாளர்கள், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து யாழ்ப்பாணத்தில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர்.

முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும்; பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளை கேட்றிந்து கொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் –

ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளி என்ற வகையில் மக்களின் அழிவுகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று அழிந்துகிடக்கும் எமது மக்களின் வாழ்வியலை சிறந்ததாக உருவாக்குவதே எனது பெரும்பணியாக உள்ளது. அதையே நான் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றேன்.

ஆனாலும் மக்கள் அதற்கான முழுமையான பெறுபேறுகளை பெறுவதற்கான அரசியல் அதிகாரங்களை எமது கரங்களுக்கு இதுவரை தந்திருக்கவில்லை.

குறிப்பாக அக்கறையும் ஆற்றலும் அற்றவர்களின் கைகளில் மக்கள் அதிகாரங்களை கொடுத்து வருகின்றமையால் இன்றுவரை எமது மக்கள் இன்னொருவரது உதவியில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் காணப்படுகின்றனர்.

தமிழ் மக்களுக்கு கிடைத்த அரிய வாய்ப்பான இலங்கை – இந்திய ஒப்பந்தததின் ஊடாக கிடைத்த மாகாணசபை அதிகாரங்களைக். அதுகூட தவறானவர்களின் கைகளில் சென்றடைந்தமையினால் மக்களின் எதிர்காலங்கள் சரியாக கையாளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும் சுயலாப அரசியல் தலைமைகளின் வாக்கு அபகரிப்புகளுக்காக மக்கள் மனங்களி்ல் யதார்த்தமற்ற தவறான கருத்துக்கள் ஊட்டப்பட்டுவருவதால் கிடைக்கின்ற நன்மைகள் அனைத்தும்  வீணடிக்கப்பட்டு வருகின்றன என்றும் இதை இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் உணர்ந்து தமது எதிர்காலம் கருதியதாக பயன்படுத்தி எமது கரங்களுக்கு அதிகாரங்களை தருவார்களானால் வடபகுதி முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மட்டுமல்லாது தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் அதிகளவான பிரச்சினைகளுக்கு எம்மால் தீர்வுகண்டுதர முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

தமிழ் மக்களின் வாழ்வை கட்டியெழுப்ப அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம்....
புறக்கணிக்கப்பட்ட மோதரை மீனவர்களுக்கு 7 மில்லியன் நிதியுதவி - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்த...
அமைச்சர் டக்ளஸ் அழைப்பு – அடுத்தவாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு விஜயம் செய்கின்...

வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் அலுவலகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்ப...
ஜனாதிபதி முன்னிலையில் இணக்கம் காணப்பட்ட மக்கள் நலன்சார்ந்த வேலைத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்த...
தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு யார் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார்களோ அவர்க...