வடபகுதி மக்கள் கடலட்டை வளர்ப்பில் ஆர்வம் – மூலப் பொருட்களை ஏற்பாடு செய்வது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆராய்வு!

கடலட்டை வளர்ப்பு, பாசி வளர்ப்பு போன்ற நீர்வேளாண்மைச் செயற்பாடுகளில் வடக்கு மாகாண மக்கள் ஆர்வம் காண்பித்து வருகின்ற நிலையில், அவர்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களையும் மூலப் பொருட்களையும் ஏற்பாடு செய்வது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது, கடலட்டைப் பண்ணைகளுக்கான குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள், ஓலைத்தொடுவாயில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை இனப் பெருக்க நிலையத்தினை வினைத்திறனுடன் செயற்படுத்துதல் மற்றும் இறால் பண்ணைகள், பாசி வளர்ப்பு போன்றவற்றில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
Related posts:
யாழ்.மாவட்ட செயலக நிர்வாக கட்டிடத்தொகுதி பிரதமரால் திறந்துவைப்பு!
எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம...
நீதித்துறைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் - வலியுறுத்துகிறார் டக்ளஸ் எம்...
|
|
உரிய காலத்தில் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தால் அழிவுகளையும் சேதங்களையும் தடுத்...
பங்களாதேஷில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர் - அமைச்சர் டக்ளஸ் த...
தமிழர் வாழ்விடங்கள் தோறும் புது மகிழ்ச்சி பொங்கிட தைப்பொங்கல் திருநாளை வரவேற்போம் - வாழ்த்தச் செய்தி...