வடக்கு மாகாண சபையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றதா? – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 27th, 2016

வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவே இருக்கின்றது. மாகாணசபையெனும் அதிகார மையத்தை, தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கி அபகரித்துக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வடக்கு மாகாணசபையை சரியாக நிர்வகிக்கவில்லை. தெற்கில் ஆட்சி மாற்றம் ஒன்று தம்மாலேயே ஏற்படுத்தப்பட்டிருப்பதாக கூறிக்கொள்ளும் கூட்டமைப்பினர் தற்போதும் வடக்கு மாகாணசபையை எமது மக்களுக்கும் மாகாணத்திற்கும் பயனுள்ள வகையில் நிர்வகிக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூல் பதிவில் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது முகநூல் பதிவை எமது EPDPNEWS.COM இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம் –

இப்போது தமக்குள்ளே முட்டி மோதிக் கொண்டும், தாம் பொறுப்பேற்றுள்ள அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவிகளில் ஊழல் மோசடிகள் செய்துகொண்டும் தம்மைத்தாமே விசாரிக்க குழுக்கள் அமைத்துக்கொண்டும் பொறுப்பற்ற விதமாக மாகாண சபையை துஷ;பிரயோகம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அன்மையில் கூட வடக்கு மாகாணசபையின் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது கூட்டமைப்பின் மற்றுமொரு உறுப்பினரான பரஞ்சோதியினால் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சபையிலேயே முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் விவசாய அமைச்சில் நடைபெற்ற மோசடிகள், அதிகாரத் துஸ்பிரயோகங்கள் என்பவற்றை விசாரணை செய்ய வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்களாகிவிட்ட போதும் இன்னும் அந்த தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியிருக்கின்றார்.

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது போலவே பரஞ்சோதியின் குற்றச்சாட்டுக்கள் அமைந்திருப்பதாகவே கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்கள் கொதித்துப்போயிருக்கின்றார்கள்.

இவ்வாறு வடக்கு மாகாணசபையை முடக்கியும், அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்துகொண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் மக்களுக்கு பெரும் துரோகத்தைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். தேர்தல்காலங்களில் பொய்யானதும்,

நடைமுறைச்சாத்தியமற்றதுமான வாக்குறுதிகளை மக்களுக்கு வழங்கி அதிகாரங்களைக் கைப்பற்றியவர்கள் மக்களின் எதிர்பார்ப்பை துஸ்பிரயோகம் செய்வார்களேயானால் அவர்களை தண்டிக்க வேண்டிய பொறுப்பும் மக்களுக்கே உரியது என்பதை மக்கள் புரிந்து கொண்டு எதிர்காலத்தில் தீர்மானங்களை எடுத்திருப்பதாகவே தெரிகின்றது.

Related posts:

வீட்டுத்த திட்டத்தால் கடனாளிகளானவர்களுக்கு நிவாரணம் வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலிய...
இரணைமடு குளத்தால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்க வேண்டும் – நாடாளுமன்...
அவசர காலச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்தா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. க...