யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வாழ்வாதார அபிவிருத்திக் குழுக் கூட்டம் நாளை – நான்கு அமைச்சர்கள் ஆறு இராஜாங்க அமைச்சர்கள் பங்கேற்பு!

Tuesday, March 16th, 2021

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கமைய முன்னெடுக்கப்படட்டு வரும் கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதன் பொருட்டு ஸ்தாபிக்கப்பட்ட வாழ்வாதார அபிவிருத்திக் குழுவின் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான முதலாவது கூட்டம் நாளை (17.03.2021) யாழ்ப்பாபணம் மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கடற்றொழில் அமைச்சரும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெறவுள்ள குறித்த கூட்டம் காலை 09.00 மணிக்கு யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமை தாங்கலில் நடைபெறும் குறித்த கூட்டத்தில் வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சீ.பீ.ரத்நாயக்க, கமத்தொழில் அமைச்சர்  மஹிந்தானந்த அளுத்கமகே, சுற்றுலாத்துறை அமைச்சர்  பிரசன்ன ரணதுங்க ஆகியோருடன் ஒன்பது இராஜாங்க அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெறவுள்ளது.

குறித்த கூட்டத்தின்போது கிளிநொச்சி  மற்றும் யாழ் மாவட்டங்களில் குறித்த துறைசார் அமைச்சுக்களின் கீழ் உள்ள பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு அவற்றுக்கான தீர்வுகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:

சமுர்த்தி நலனுதவி கோரும் குடும்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் - டக்ளஸ் ...
எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்...
அரசியல் கைதிகளின் உணர்வுகளை அனுபவ ரீதியாக உணர்ந்தவன் நான் - விடுதலைக்கு துரித நடவடிக்கை மேற்கொள்வேன்...

இளம் சந்ததியினர் தடம் மாறிச் செல்ல இருந்த தமிழ் தலைமைகளே காரணம் – யாழ்ப்பாணத்தில் அமைச்சர் டக்ளஸ் தே...
எமக்கான புதிய முகவரிகள் உருவாகின்றன. - தங்கம் வென்ற வீராங்கனைக்கான வாழ்த்து செய்தியில் அமைச்சர் டக்ள...
சர்வ கட்சி அரசில் தமிழ் கட்சிகள் பங்கெடுப்பது அவசியமாகும் - அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!