யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் – கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செயற்படுமாறு வேண்டுகோள்!

Thursday, February 23rd, 2023

யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமான  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருவருக்குமான நியமன கடிதத்தை பிரதமர் தினேஷ் குணவர்த்தன இன்று(23.02.2023) வழங்கி வைத்துள்ளார்.

இதேவேளை, கடந்த காலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா செயற்பட்டிருந்த நிலையில், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களையும் கொள்கையையும் புரிந்து கொண்டு, அதனை வலுப்படுத்தும் வகையில் செயற்படக் கூடிய பொருத்தமான ஒருவர் நியமிக்கப்படும் வரையில் கிளிநொச்சி மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழுவிற்கான பதில் தலைவராகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை செயற்படுமாறு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- 23.02.2023

00

Related posts:

எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சு...
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை ஆராய்வதற்கு விசேடகுழு நியமிக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானம்!
அமைச்சர் டக்ளஸ் முயற்சி: சிலதினங்களில் வவனியாவுக்கு பி.சி.ஆர் இயந்திரத்தை வழங்க சுகாதார அமைச்சர் பணி...

தெல்லிப்பளை வறுத்தலைவிளான் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா விஜயம்
நல்லொழுக்க  சந்ததிக்காய் அனைவரும் ஒன்றிணைவோம்-சித்தியெய்திய மாணவர்களு க்கான வாழ்த்துச் செய்தியில் டக...
யாழ் பல்கலை முகாமைத்துவ உதவியாளர் வெற்றிடங்கள் சுற்றறிக்கையின் பிரகாரமா நிரப்பப்படுகின்றன.– நாடாளுமன...