யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, January 5th, 2022

யாழ் மாவட்டத்தில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு முன்வந்துள்ள தொழில் முனைவோரின் கோரிக்கைகள் யாவும் பரிசீலிக்கப்பட்டு முடிந்தளவு விரைவில் கடலட்டைப் பண்ணைகள் அமைக்கும் பணிகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இதன்மூலம் மக்களுக்கு விரைவான வாழ்வாதாரத்தினை ஏற்படுத்துவதுடன் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பங்களிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்டத்தில் கடலட்டை பண்ணை அமைக்கும் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் நோக்கில் கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் கடலட்டை பண்ணைகளை அமைப்பதற்காக விண்ணப்பித்தவர்களும் கலந்து கொண்டனர்

Related posts:


ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஷேட சந்தி...
மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகரிக்கும் விளையாட்டுப் போட்டிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு தொடரும்...