யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆராய்வு!
Friday, November 5th, 2021
யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பலநாள் கலன் உரிமையாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் வி.எம். எஸ். எனப்படும் படகு கண்காணிப்பு கருவிகள், வானொலி தொடர்பாடல் கருவி போன்றவற்றை மீன் பிடிக் கலன்களுக்கு பொருத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இதனிடையே யாழ் மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் மற்றும் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.
பிரதேச செயலாளர்கள், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
சொல்லுவதை செய்கின்றவர் - செய்வதை சொல்லுகின்றவருக்கு 63 ஆவது பிறந்த நாள்
காட்டாறுகளை கடந்து வந்தவர்களை கால் தடங்கல்களினால் தடுக்க முடியாது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்...
அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு - நிறைவுக்கு வந்தது கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்!
|
|
|


