யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் நிதியுதவி!

Saturday, June 15th, 2024

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைத்து புனரமைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதி ஒதுக்கீடு பெற்றுக்கொடுக்கப்பட்டள்ளது

தமது ஆலயங்கள் மீள் புனரமைப்பு செய்யப்பட வேண்டும் எனவும் அதற்கான  நிதியுதவியை பெற்றுத்தருமாறும் ஒருதொகுதி ஆலய நிர்வாகத்தினரால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த தரப்பினருக்கான காசோலைகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன.

இந்து கலாசார திணைக்களத்தின் 2024 இற்கான நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கிடைக்கப்பெற்ற நிதியே குறித்த ஒரு தொகுதி ஆலயங்களுக்கு நிதியுதவியாக  இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இதனடிப்படையில், தெரிவு செய்யப்பட்ட சுமார் 25 ஆலயங்களுக்கு தலா இரண்டு இலட்சம் ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி க...
பயனற்ற அலுவலகங்களுக்கு மக்கள் பணத்தினை வீண்விரையம் செய்யாதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா எம...
சுயலாப அரசியல் நடத்திவரும் தமிழ் தலைமைகள் போல் நானும் இருந்து விட முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்...