யாழ். போதனா வைத்தியசாலையில் நவீன வசதிகளுடன் கூடிய மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017

யாழ் போதனா வைத்தியசாலைக்கு விபத்து சிகிச்சை பிரிவுக்கென  600 மில்லியன் ரூபாவும் நோயாளர் விடுதித் தொகுதி அமைப்பதற்கு 1300 மில்லியன் ரூபாவும் பாரிசவாத பிரிவுக்கு 700 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டு அதற்கானப் பணிகள்  நடைபெற்று வருவதாகவும் தெரிய வருகின்றன. இப்பணிகளைத்  துரித கதியில் முன்னெடுத்து அத்துறைகளை விரைந்து இயங்கச் செய்வதற்கு  நடவடிக்கை வேண்டும் என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன்.

அதே நேரம் குறைந்தது 300 கட்டில்களைக்; கொண்டதாகவும் சத்திரசிகிச்சை தொகுதி மற்றும் மகப்பேற்று அறை உள்ளடங்களாகவும் ஒரு மகப்பேற்று கட்டிடத்தொகுதி அமைப்பதற்கான தேவை இருக்கின்றது.  இதற்கென சுமார்  2000 மில்லியன் ரூபா செலவிட நேரிடும் என்றும் தெரிய வருகின்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றைய தினம் சுகாதார போசணை சுதேச மருத்துவம் மற்றும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு ஆகிய இரு அமைச்சுக்கள் தொடர்பான குழநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts: