யாழ்.ஒருங்கிணைப்புக் கூட்டத்தின் பிரதிபலிப்பு – எழுதாரகை பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டது!

Wednesday, March 8th, 2023

அண்மையில் இடம்பெற்ற யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைய எழுதாரகை பயணிகள் கப்பல் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற குறித்த முன்னாய்த்த கூட்டத்தில், எழுவைதீவு மக்களின் போக்குவரத்திற்கு இடையூறாக, பழுதடைந்த நிலையில் உள்ள எழுதாரகை கப்பல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அதுதொடர்பில் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், கப்பலை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், பொது மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் பாதுகாப்பான இடத்தில் கப்பலை நிறுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு, வடக்கு மாகாணத்திற்கான கடற்படை தளபதியிடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் முன்வைத்தார்.

அதற்கமைய எழுதாரகை கப்பல், எழுவைதீவு இறங்குதுறை பகுதியில் இருந்து இன்று கடற்படையினரால் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பித்தக்கது. – 08.03.2023

Related posts: