முல்லை மீனவர்களின் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு : அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, June 29th, 2020

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று நடைபெற்ற கடற்றொழிலாளர்கள் சார் கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவத்தார்.

குறித்த கலந்துரையாடலில், வெளிச்சம் பாய்ச்சி மீன் பிடித்தலை தடை செய்தல், அனுமதிக்கப்பட்ட வலைகளை பயன்படுத்தி சுருக்கு  வலை தொழிலில் ஈடுபட அனுமதித்தல், வெளி மாவட்ட மீனவர்களை கட்டுப்படு்தல், கொக்குளாய் கடல் நீரேரியில் இயந்திர படகு பயன்டுத்தி மீன் பிடித்தலை தடை செய்தல், உள்ளூர் மீனவர்களுக்கு கடலட்டை பிடிக்கும் அனுமதி வழங்கல், கரைவலை தொழிலில் ஈடுபடுவோருக்கு நிரந்தர அனுமதி வழங்கல், நந்திக் கடல் மற்றும் நாயாறு போன்ற நீர் நிலைகளை புனரமைத்தல் உட்பட முல்லைத் தீவு மீனவர்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றில் பெரும்பாலனவற்றிற்கு சுமூகமான தீர்வு காணப்பட்டுள்ளதாக சுட்டிக் காட்டினார்.

மேலும், சுருக்கு வலை பயன்பாடு போன்ற தீர்வு காணப்படாத விடயங்களுக்கு, அடுத்த வாரமளவில் மாட்ட அரசாங்க அதிபர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் முல்லைத்தீவு உதவிப் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் கூடி ஆராய்ந்து பெரும்பாலானவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து சமூகமான தீர்வினை காணுமாறு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்

Related posts:

தொழிலாளர்கள் சட்டங்கள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா? - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா ...
உரிமை முதற்கொண்டு காணி நிலங்களின் உரிமங்களையும் பெற்றுத்தருவேன் - திருமலையில் செயலாளர் நாயகம் உறுதிய...
கிளிநொச்சி விவசாய ஆராய்ச்சி நிலைய தொழிலாளர்கள் நிரந்தர நியமனத்துக்கு வகை செய்து தருமாறு அமைச்சர் டக்...