மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டம் – புதுமுறிப்பில் ஆரம்பித்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Sunday, November 19th, 2023


தேசிய நன்னீர் மீன் உற்பத்தியினை மேம்படுத்துவதுடன் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசனையை உறுதி செய்யவும் கிராமிய மக்களின் வாழ்வாதாரத்தினை வளப்படுத்துவதையும் நோக்காக கொண்ட மீன்குஞ்சு வைப்பிலிடும் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

சுமார் 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தேசிய நிகழ்ச்சி திட்டம் கிளிநொச்சி, புதுமுறிப்பு மீன் தொட்டிகளில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

புதுமுறிப்பு பகுதியில் பிரதேச நன்னீர் மீன்பிடியாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்காக  தனியார் தொண்டு  நிறுவனத்தினால்  அமைக்கப்பட்ட மீன் தொட்டிகள்  பராமரிப்பின்றி கைவிடப்பட்டு இருந்த நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய 20 மில்லியன் நிதி ஓதுக்கீட்டில் முதற்கட்டமாக 5 தொட்டிகள் புனரமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. – 19.11.2023.
0000

Related posts:

தமிழ் மக்கள் அழிந்தபோது தமிழ்த் தலைமைகள் துடிக்கவில்லை - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!.
நாவலர் கலாசார மண்டப வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
எல்லைதாண்டிய குற்றம் - இந்தியச் சிறையில் இருக்கும் உறவினர்களை மீட்டுத் தருமாறு உறவுகள் அமைச்சர் டக்...

ரயில் சேவையின் அதிகரிப்பு நாட்டின் வாகன நெரிசல்களுக்கு தீர்வைத் தரும் -  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு...
கற்பிட்டியில் பாரம்பரியமாக இழுவை வலைத் தொழில் முறையைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்கு...
முல்லை நாயாறு பிரதேசத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - கடற்றொழிலளர் கோரிக்கைகள் தொடர்பில் நேரி...