மழைகால இடர்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் – வேலணையில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, October 17th, 2018

எடுக்கப்படும் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும் என்பதுடன் அவை ஒவ்வொன்றையும் நடைமுறைப்படுத்துவதில் அதிக அக்கறையுடன் ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கட்சியின் வேலணை பிரதேச ஆலோசனை சபை கூட்டம் வேலணை அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

மக்கள் வாழும் பகுதிகளையும் அவர்கள் சார்ந்த சூழலையும் முன்னேற்றி அவர்களது வாழ்வியலை ஒரு ஒளிமயமானதாக உருவாக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாக உள்ளது.

கடந்த காலத்தில் தீவகத்தில் குறிப்பாக வேலணை பிரதேசத்தில் நாம் பல்வேறு வழிவகையிலும் அபிவிருத்தி செய்து மக்களது தேவைப்பாடுகளை நிறைவு செய்து கொடுத்திருந்தோம். இன்றும் அதை நாம் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இல்லாதிருந்தும் கூட முன்னெடுத்து வருகின்றோம். ஆனாலும் இன்னும் குடிநீர், நிரந்தர வாழ்வாதாரம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இதற்கான தீர்வுகளை நோக்கி நாம் பல செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தற்போது மழை காலம் ஆரம்பித்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்வு அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு.

அந்த வகையில் துரித கதியில் மழைகால இடர்களை எதிர்கொள்வதற்கான முன்னேற்பாடுகளை தயார் செய்து மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே வீதி மின்விளக்கு, வீதிகள் சிற்றொழுங்கைகள் புனரமைப்பு, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் முன்மொழியப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சரியான முறையில் தீர்வுகளை முன்னெடுப்பதற்கு பிரதேச சபை உழைக்கவேண்டும் வேண்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இச்சந்திப்பின்போது கட்சியின் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன், வேலணை பிரதேச சபை தவிசாளரும் குறித்த பிரதேச நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி உள்ளிட்ட முக்கியர்தர்கள்  உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_20181016_165834 IMG_20181016_165741 IMG_20181016_165727

Related posts:

சொந்த நிலங்களை மீட்பதற்கு தமிழ் மக்கள் யாருக்கும் விலை கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை - நாடாளுமன்றில் ...
தொல்பொருள் திணைக்களத்தின் தொல்லைக்கு கூட தீர்வு காணமுடியாதவர் எப்படி நிரந்தர தீர்வை பெற்றுத் தருவார்...
முல்லை மாவட்டத்தில் அவசர தீர்வு காணவேண்டிய கடற்றொழில்சார் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைம...