மயிலிட்டியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தெய்வீக அனுபவம்!
Thursday, June 11th, 2020
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கைதொலைபேசியில் நாக பாம்பு ஒன்று படமெடுத்து ஆடுவது போன்று காட்சியளித்துள்ளது.
மயிலிட்டு குளத்தடி தேவியார்கொல்லை கண்ணகை அம்மன் ஆலய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கல்லினை இன்று நாட்டிய பின்னர் கைதொலைபேசியை பார்த்தபோதே இந்த தெய்வீக காட்சி அமைச்சருக்கு தென்பட்டு்ள்ளது.
இதனால் பரவசமடைந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தான் அடிக்கல் நாட்டியதை கண்ணகை அம்மன் ஏற்றுக் கொண்டமையின் வெளிப்பாடே இந்த தெய்வீகக் காட்சி என்று தெரிவித்ததுடன் குறித்த ஆலயத்தை திட்மிட்டபடி கட்டி முடிப்பதற்கு பொருளாதார பங்களிப்பினை வழங்குவதற்கும் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்து ஆலய கட்டடத்துக்கான அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
Related posts:
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாடு எழுச்சியுடன் ஆரம்பம்!
குற்றவாளிகளை பாதுகாக்கிறது வடக்கு மாகாணசபை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
அச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...
|
|
|


