மனித உரிமை ஆணைக்குழுவும் அரசியல் உள்நோக்கத்துடன் செயற்படுகின்றதா – அமைச்சர் டக்ளஸ் சந்தேகம்!

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயற்பாடு பக்கச்சார்பாக அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அரசியல் உள்நோக்கம் இருப்பதான சந்தேகத்தினை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
பூநகரி, கிராஞ்சிப் பிரதேசத்தினை சேர்ந்த சிலர் கடலட்டைப் பண்ணைகள் சட்டவிரோதமாக அமைக்கப்படுவதாக முன்வைத்த முறைப்பாட்டினை ஏற்று விசாரணை நடத்திய மனித உரிமை ஆணைக் குழுவினர், அதே பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 180 கடற்றொழிலாளர்கள், தமது வாழ்வாதாரத்திற்கான கடலட்டைப் பண்ணைகளை வழங்குவதற்கு அதிகாரிகள் தேவையற்ற கால இழுத்தடிப்பை மேற்கொள்வதாக குற்றஞ்சாட்டி, மேற்கொண்ட முறைப்பாட்டினை ஏற்றுக்கொள்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மறுத்திருப்பது நியாயமற்றது எனவும் தெரிவித்தார்.
Related posts:
|
|