மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி நேரடியாக வேண்டுகோள்

Monday, April 10th, 2017

13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேரடியான  கோரிக்கை ஒன்றை விடுத்த ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அப்பால் தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகளை பூர்த்தி செய்யக் கூடியது என ஏற்றுக்கொள்ளக்கூடிய புதியதொரு தீர்வு வரைபு அல்லது திருத்த வரைபு முன்வைக்கப்படுமானால் அதற்கு எமது கட்சி பூரணமாக ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகத்திற்குமிடையேயான சந்திப்பு பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில்  அண்மையில் நடைபெற்றது. சந்திப்பில் தமிழ் மக்களின் தற்போதைய முதன்மைக் கோரிக்கைகளான நிலமீட்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டங்கள், வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டங்கள், மற்றும் சிறையில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, முடக்கப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடினர்.

தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான போராட்டங்களுக்கு அரசாங்கம் விரைவான தீர்வை வழங்க வேண்டும். தீர்வானது முழுமையானதாக அமையப் பெறுதல் வேண்டும். அல்லது கட்டங்கட்டமாகவேனும் தீர்வு வழங்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கம் தீர்வை வழங்க முன்வருவதாக நம்பிக்கை ஏற்படுத்துகின்ற வகையில் அரசின் நடவடிக்கைகள் அமையவேண்டும் என்பதையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயங்கள் தொடர்பில் விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களையும் சந்தித்து கலந்துரையாட இருப்பதாகவும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

Related posts:


அச்சம் கொள்ள வேண்டாம் – சிவில் பாதுகாப்பு திணைக்கள முன்பள்ளி ஆசிரியர்களிடம் டக்ளஸ் எம்.பி உறுதி!
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
ஜுலைக்கு வெள்ளை அடிக்காது பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு வெள்ளை அடியுங்கள் – நாடாளுமன்றில் டக்ள...