பொருளாதார மத்திய நிலைய இழுபறி கூட்டமைப்பின் மெத்தனப் போக்கை காட்டுகின்றது!

Sunday, July 10th, 2016

பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கான காணியை பார்வையிடுவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராசா ஓமந்தைக்கு விஜயம் செய்திருக்கின்றார் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு அதிருப்தியை கொடுத்துள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது முகநூலில் சுட்காட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக அவர் தனது பதிவில் –

அண்மையில் கூடிய தமிழத் தேசியக் கூட்டமைப்பின் விஷேட கூட்டத்தில் பொருளாதார மத்திய நிலையம் எங்கே அமைய வேண்டும் என்ற கலந்துரையாடல்களை நடத்தியதாகவும், தம்மால் முடிவு செய்ய முடியவில்லை என்றும் மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியே இறுதி முடிவு எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.

இப்போது மாவை சேனாதிராசா ஓமந்தைக்கு விஜயம் என்றும், பொருளாதார மத்திய நிலையம் அமையவுள்ள இடத்தைப் பார்வையிட்டார் என்றும் கூறுகின்றார்கள்.

அப்படி என்றால் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கு தெரிவு செய்யப்பட்ட இடங்கள் எவை என்பதை நேரடியாகத் தெரிந்து கொள்ளாமலும், பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான திட்டத்தை முழுமையாக அறிந்து கொள்ளாமலுமே இவர்கள் கூட்டம் கூடி கலந்துரையாடி காலத்தை வீணடித்திருக்கின்றார்கள்.

மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்போவதாகக் கூறி மக்களின் தலையில் இழுபறியை தள்ளிவிட்டுள்ளார்கள். இப்போது வட மாகாண முதலமைச்சரை ஓரம்கட்டிவிட்டு, தமிழரசுக் கட்சிதான் பொருளாதார மையம் தொடர்பான முடிவை எடுத்தது என்றவிதமாக காட்டுவதற்காக மாவை சேனாதிராசா விஜயம், பார்வையிடுகின்றார் என்று கதை கூறுகின்றார்கள்.

மாவை சேனாதிராசா. வேறு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது வெளிநாட்டு நாடாளுமன்ற உறுப்பினராகவோ இருந்திருந்தால் அவர் ஓமந்தைக்குப் போவதையும், அதிகாரிகளிடம் விசாரிப்பதையும் பரபரப்பாக பிரசாரம் செய்திருக்கலாம்.

எத்தனை தடவை ஓமந்தையைத் தாண்டி மாவை சேனாதிராசாவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பயணம் செய்திருப்பார்கள். அப்போது பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான சர்ச்சையை தீர்க்கும் எண்ணம் இருந்திருந்தால் ஓமந்தையையும், தாண்டிக் குளத்தையும் பார்வையிட்டு அது தொடர்பான முடிவை எடுத்திருக்கலாம்.

இப்போது பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள 200 கோடி ரூபாயை திருப்பி அனுப்ப விடுமாட்டோம் என்றும் பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையிலோ, தாண்டிக்குளத்திலோ அமைக்கப்படுவது அவசியம் என்றும் கூறுகின்றாராம்.

ஒரு விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வளவு மெத்தனப் போக்காகவும், செய்து முடிக்கும் விருப்பம் இல்லாமலும் அணுகுகின்றார்கள் என்பதற்கு அன்மைய சிறந்த உதாரணங்களில் ஒன்றாகவே பொருளாதார மத்திய நிலையம் தொடர்பான கூட்டமைப்பின் இழுபறியை பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Related posts:

இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
ஆயுதமேந்திய போராட்டத்தின் வெற்றியே மாகாணசபை முறைமை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
கறுப்பு ஜுலையின் காயங்கள் மக்களிடையே இன்னமும் மாறவில்லை - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் சுகாதார ஊழியர்களும் தொண்டராசிரியர்களும் சந்தித்து கலந்து...
தமிழ் மக்கள் மிதிக்கப்படாமல் -மதிக்கப்படும் சூழலை உருவாக்குவோம் வாருங்கள்-நாடாளுமன்றில் அமைச்சர் தேவ...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி - 52 தொழில் முனைவோருக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீ...