பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தம் பணிகள் ஆரம்பம் – அமைச்சர் டக்ளஸின் வழிநடத்தலில் கிளிநொச்சியில் பாரிய திட்டம்!

Tuesday, October 27th, 2020

நீர்வேளாண்மைகளில் ஒன்றான கடலட்டைச் செய்கை மற்றும் அது சார்ந்த நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் பொருட்டு கிளிநொச்சியில் பொருத்தமான இடங்களை அடையாளப்படுத்தி வரைபடம் தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

நிலைபேறான கடற்றொழில் அபிவிருத்திக்கும், கடல்வளங்களை பாதுகாத்து நீடித்திருக்கக்கூடிய மீன்பிடி நடவடிக்கைகள் ஊடாக உற்பத்தியை அதிகரித்து ஏற்றுமதி வருமானத்தில் வடமாகாணத்தின் பங்களிப்பை உறுதிப்படுத்தம் வகையிலான நீர்வேளான்மை அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளிலான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத் திட்டத்திற்கு அமைய, நாரா எனப்படும் தேசிய நீர்வள அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ நிறுவனம் குறித்த வரைபடங்களை தயாரிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

அதனடிப்படையில், நாச்சிக்குடாவின் தெரிவு செய்யப்பட்ட இரண்டு பிரதேசங்களில் 14 மற்றும் 47 வரைபடங்கள் உள்ளடங்கிய மொத்தமாக 61 வரைபடங்கள் தாயாரிக்கும் பணி கடந்தவாரம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக்குடா பகுதியில் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் இருந்து 28 வரைபடங்களும் கிராஞ்சிப்பிரதேசக் கடற்பரப்பில் இருந்து விண்ணப்பிக்கப்பட்டவர்களுக்காக 13 வரைபடங்களும் தயாரிக்கும் பணி எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்பட்டவுள்ளது.

அதேவேளை, ஏற்கனவே இரணைதீவு கடற்பிரதேசத்தில் மொத்தமாக 103 ஏக்கர் பரப்பளவில் 85 வரைபடங்கள் தயாரிக்கபட்டு புதிய செய்திட்டம் ஒன்றிற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. இதில் தனியார் முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்டிணைந்த நவீன நடைமுறைகள் உள்ளடங்கிய நீர்வேளாண்மையில் ஒரு பிரிவான கடலட்டை உற்பத்தி இலங்கையில் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மேலும் கடல்வளங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் ஏதுகொண்டதாக ஆய்வாளர்களால் விதந்துரைக்கப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்புடன் கூடிய, அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக்கும் வகையில் இவ் செயற்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பக்கட்டமாக 200 நீர்வேளான்மை அலகுகளை கிளிநொச்சியில் நிறுவதலும் தொடர்ந்து யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிளுக்கும் இவ் செயற்திட்டங்களை விரிவுபடுத்தும் வகையில் கௌரவ அமைச்சரினால் திணைக்களங்களுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: