புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் பங்கேற்பு!

Tuesday, February 27th, 2024

இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி சிறப்பித்திருந்தார்.

இதன்போது புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டது. அத்தோடு உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வும்  இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாசுந்தரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளர் நடராஜா திருலிங்கநாதன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பிரதீபன், பிரதேச செயலாளர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், மாணவர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


மாகாணசபை தேர்தல் மழையில் முளைத்த அரசியல் காளான்கள் - சத்தியலிங்கத்திற்கு ஈ.பி.டி.பி விளக்கம்!
கடல் உணவு உற்பத்தியின் கேந்திர நிலையமாக தீவகப் பகுதி மாற்றப்படும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவி...
கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை துறையில் நிலையான அபிவிருத்தியை எட்ட தொழில்நுட்பம் மற்றும் முதலீடுகளை...