பிரமாண்டமாக ஆரம்பமானது ஈ.பி.டி.பியின் வட்டார செயலாளர்கள் ஒன்றுகூடல்!
Thursday, August 31st, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வட்டார செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கான ஒன்றுகூடல் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வெகு பிரமாண்டமாக ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
முமுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்டத்தில் உள்ள 241 வட்டாரங்களையும் உள்ளடக்கிய நிர்வாக செயலாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஒன்றிணைந்து கலந்தகொள்ளும் இந்த பிரமாண்டமான விஷேட ஒன்றுகூடல் காலை 10 மணிக்கு அரம்பமாகி நடைபெற்றுவருகின்றது.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தில் இன்னுயிர்களை ஈந்த அனைத்து இயக்கப் போராளிகளையும் நினைவு கூர்ந்ததுடன் யுத்தத்தின்போது பலியாகிப்போயிருந்த அனைத்துப் பொதுமக்களுக்கும் ஒன்றுகூடலின் ஆரம்பத்தில் ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

Related posts:
திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர...
மாற்று வேலைத் திட்டத்திற்குமான அதிகாரத்தை கோரி உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றோம் – திருமலையில் அ...
வெளிநாடுகளில் இலங்கை மீன்பிடித்துறைக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கடற்றொழில...
|
|
|


