பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரிடம் அமைச்சர் டக்ளஸ் பிரஸ்தாபிப்பு – இந்திய பட்டதாரிகளையும் அரச சேவையில் உள்வாங்க தீர்மானம்!

Thursday, October 27th, 2022

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட இந்தியப் பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளையும் பட்டதாரி நியமனங்களில் உள்வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இன்று(27.10.2022) பிரதமர் தினேஸ் குணவர்த்தன மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த கால யுத்த அனர்த்தம் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவில் தங்கியிருந்த காலப் பகுதியில், இந்தியப் பல்கலைக் கழகங்களில் கல்வி கற்று பட்டதாரிகளானவர்கள், யுத்தம் நிறைவடைந்த பின்னர் தங்களின் சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

அவ்வாறானவர்கள், அண்மைய காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அரச சேவைக்கான பட்டதாரிகள் ஆட்சேர்ப்புக்களின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டிருந்தனர்.

இதுதொடர்பாக பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பட்டதாரிகள் நியமனத்தின் போது, வெளிநாட்டு பட்டதாரிகள் என்ற காரணத்தினால் பாதிக்கப்பட்ட குறித்த பட்டதாரிகளும் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுத்தினார்.

இந்நிலையில், இலங்கை பல்கலைக்கழக மானியங்களினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டதாரிகளை அரச சேவையில் உள்ளீர்ப்பதற்கு பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோரினால் தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

போலித் தேசியம் பேசி பாவமன்னிப்பு கேட்கிறார் சிவாஜிலிங்கம் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சாட்டையடி!
கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - கட்சியின் செயற்பாட...
இறால் அறுவடையே எமக்கு வாழ்வாதாரமாக உள்ளது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பயனாளிகள் நன்றி தெரிவிப்...