பிரச்சினையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை சரியான வழியில் செயற்பட வைப்பதே எனது நோக்கம் – அதையே மணிவண்ணன் விவகாரத்திலும் மேற்கொண்டேன் – அமைச்சர் டக்ளஸ்!

Sunday, April 11th, 2021

பொறுப்புள்ள ஒரு தமிழ் அரசியல் தலைவர் என்ற அடிப்படையில், பிரச்சனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை மீட்டு சரியான வழியில் அவர்களை தொடர்ந்து செயற்பட வைக்கும் பொறுப்பு எனக்குள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாதேசிய ஒற்றுமையையும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்தும் விதமாகவே எனது அனைத்து செயற்பாடுகளும் அமையும் என்றும் அதற்கு எதிரான – விக்னேஸ்வரன் போன்றவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிற்கு பிணை வழங்கியது அரசாங்கமா நீதிமன்றமா என கேள்வியெழுப்பியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், அதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் பதிலளிக்க வேண்டுமென ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் எமது செய்திப் பிரிவு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில் –

தமிழ் உரிமைப் போராட்டம் திசைமாறி சென்றபோ அதை நியாயப்படுத்தி ஊக்குவித்திய அன்றைய தமிழ் அரசியல் தலைவர்கள், அது தமிழ் மக்களை அழிக்கும் என்று சிந்திக்காதிருந்ததுடன் அந்த ஆயுதப் போராட்டம் சுயநலம் சார்ந்த தமது செயற்பாடுகளால் அவர்களையும் அழிக்கும் என்றும் நினைத்திருக்கவில்லை.

அத்தகைய தமிழ் தலைவர்களது சுயநலத்துக்காக அன்று ஆயுதம் ஏந்தியவர்களை தவறாக வழிநடத்தி அதலபாதாழத்துள் விட்டவர்களைப் போன்று நான் இருந்துவிடப் போவதில்லை.

யாழ் மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் கடந்த 8 ஆம் திகதி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, 9 ஆம் திகதி அதிகாலை பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதியுடன் மணிவண்ணன் தவறை அறியாத் தவறாக கருதி மன்னிப்பளிக்க வேண்டும் என நான் கோரியிருந்தமைக்கு அமைவாக அன்றிரவு  நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இதை நான் மேற்கொண்டது நாட்டில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே மேற்கொண்டிருந்தேன். எமது நாட்டில் இரு தரப்பும் எதிரும் புதிருமாக செயற்பட்டு, மீண்டும் அழிவுகரமான சூழல் ஒன்று ஏற்படும் நிலைமையை உருவாக்கக்கூடாது என்றே நான் உழைத்துவருகின்றேன். அத்துடன் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுக்கும் பொறுப்புணர்வு எனக்கு  உண்டு.  அதையே நான் நிறைவேற்றி வருகிறேன். எனது இந்த செயற்பாட்டை தென்னிலங்கை மக்களும் மாறிமாறிவந்த அரசுகளும் நன்கு அறிவார்கள்.

அதேநேரம் இன நல்லிணகத்திற்கு எதிராக செயற்படும் – விக்னேஸ்வரன் போன்ற பொறுப்பற்றவர்களின் கேள்விகளிற்கு பதிலளிப்பது எனது நோக்கமல்ல என்று தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ் மாநகரசபையை அமைப்பதில் மணிவண்ணன் தரப்பிற்கு நாங்களும் ஆதரவளித்தோம். அந்த சபையை சிறப்பாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு எமக்கும் உள்ளது என்றும் சுட்டிக்காபட்டியிருந்தார்.

அதுதவிர, ஒரு பொறுப்புள்ள தமிழ் கட்சி தலைவர் என்ற அடிப்படையில், பிரச்சனையில் சிக்கியுள்ள தமிழ் மக்களை மீட்டு சரியான வழியில் அவர்களை தொடர்ந்து செயற்பட வைக்கும் பொறுப்பும் எனக்குள்ளது. உள்ளது.

குறிப்பாக யுத்த காலத்திலும் அதன் பின்னரான காலத்தில் முன்னாள் போராளிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இப்படியான நெருக்குடிக்குள் சிக்கியிருந்த நிலையில், என்னிடம் வந்திருந்தார்கள்.. அவர்களின் பிரச்சனைகளை நான் தீர்த்து வைத்திருக்கின்றேன்.

ஆனால் எம்மிடம் உதவி பெற்றவர்கள் யாரும் வெளியில் சொல்லாததால் விக்னேஸ்வரன் போன்றவர்களிற்கு அது தொடர்பில் தெரியாமல் இருந்திருக்கலாம் என தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்போது சூட ரியூப் தமிழ் நிறுவனமும் என்னை தொடர்பு கொண்டு கைது செய்யப்பட்ட தமது நிறுவனத்தை சேர்ந்தவர்களை விடுதலை செய்ய உதவுமாறும் இனி அவ்வாறான பிரச்சனையின்றி தாம் செயற்படுவதாகவும் கூறுயிருக்கிறார்கள்.

அந்தவகையில் ஏராளமானவர்கள் என்னிடம் உதவிகோரி வருகிறார்கள். பிரச்சனையில் சிக்கியவர்கள் வெளியில் வருகிறார்கள். அதில் மணிவண்ணனும் ஒருவர் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: