பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, October 12th, 2022

தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகள் தீராமல் இருப்பதற்கு  தமிழ் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகின்ற தமிழ் பிரகிருதிகளே காரணம்  கன்னியா இராவணேஸ்வர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைத்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

முன்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிடைத்த அரச நிதிப் பங்களிப்புடன் அமைக்கப்படட திருகோணமலை இராவணேஸ்வர் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைத்து வரப்பட்டார்.

திருகோணமலை, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஒன்றுகூடல் மண்டபத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராவணேஸ்வரர் சிவன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் பங்குபற்றினார்.

தமிழர்களின் கலாசார நடனங்களில் ஒன்றான கும்மி நடன வரவேற்போடு அழைத்து வரப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கன்னியா இராவணேஸ்வரன் தமிழ் வித்தியாலயத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தினை திறந்து வைத்தார்

இதனிடையே திருகோணமலை சாம்பல் தீவு களப்பு பிரதேசத்தினை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த களப்பு பிரதேசத்தினை கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், வனவள ஜீவராசிகள் திணைக்களத்துடன் இணைந்து முகாமைத்துவம் செய்து களப்பினை பாதுகாப்பதற்கான சாதக பாதகங்கள் தொடர்பாக அதிகாரிகளுடன் ஆராய்ந்தார்.

000

Related posts:

விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தை...
ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
பேசாலை காற்றாடி மின் ஆலை - மீன் இனப்பெருக்கம் பாதிப்பு என குற்றச்சாட்டு - விஞ்ஞான ரீதியாக ஆய்யுமாறு ...

கூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ...
கலாநிதி சர்வேஸ்வரன், பேராசிரியை நஜீமா அடங்கிய புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு நியமனம்!
மன்னார் - முசலிப் பிரதேசத்தில் நீர்வேளாண்மை சார்ந்த உற்பத்தியை மேற்கொள் பயனளர்களுக்கு இரண்டாம் கட்ட...