பத்தினிபுரம் கிராம மக்களது மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 26th, 2017

பாலம்போட்டாறு பத்தினிபுரம் கிராம மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் மயான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பாலம்போட்டாறு பத்தினிபுரம் கிராம மக்களுடனான குறைகேள் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நூற்றுப் பத்து குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் குறித்த பகுதியில் வாழ்ந்துவருவதாகவும் 1964 ஆம் ஆண்டுமுதல் அப்பகுதியில் நிரந்தரமானதொரு மாயானம் இல்லாத நிலையில் மக்கள் தமது இறந்த உறவுகளுக்கான இறுதிக் கடமைகளை செய்வதில் பாரிய இடர்பாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாக அரசியல் தரப்பு உள்ளிட்ட பலரிடம் நீண்டகாலமாக முறைப்பாடு செய்துவந்திருந்தபோதிலும் இதுவரையில் சாதகமான பதில்கள் உரிய தரப்பினரிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை என மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா மக்கள் எதிர்கொள்ளும் இப்பிரச்சினைக்கு துறைசார்ந்தவர்களுடன் கலந்துரையாடி அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார். அத்துடன் பதிதினிபுரம் அம்மன் கோயில் புனரமைப்பிற்கு நிதி ஒதுக்கீட்டை பெற்றுத்தருவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்

முன்பதாக குறித்த கோயிலில் இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளிலும் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்றிருந்தார். இதனிடையே கப்பல்துறை திருக்காளாத்தீஸ்வரர் கோவிலுக்கும் டக்ளஸ் தேவானந்தா வியஜம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSCF0838

DSCF0840

DSCF0844

DSCF0849

DSCF0852

DSCF0854

DSCF0864

DSCF0861

DSCF0864

Related posts:


இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் - பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
பிரதேசத்தின் வளங்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கான அடிப்படைகளாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் - அமைச்சர் ...
நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் ...