நெடுந்தீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு!
Friday, February 2nd, 2018
நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அங்குள்ள மக்கள் மாலை அணிவித்து மகத்தான வரவேற்பளித்துள்ளனர்.
நெடுந்தீவுக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு இன்றைய தினம் குறிகாட்டுவானிலிருந்து புறப்பட்டு நெடுந்தீவு இறங்குதுறையைச் சென்றடைந்த டக்ளஸ் தேவானந்தாவை அங்கு வீதியின் இருமருங்கிலும் திரண்டிருந்த மக்கள் மாலை அணிவித்து மங்கல வாத்தியம் சகிதம் மகத்தான வரவேற்பளித்து அழைத்துச் சென்றனர்.
அத்துடன் செல்லும் வழி நெடுகிலும் மக்கள் மலர் மாலைகளை அணிவித்தும் மலர்களைத் தூவியும் பட்டாசுகளைக் கொளுத்தியும் “எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவே” என்று உரத்துக் குரலெழுப்பி அன்புடன் வரவேற்றனர்.
அத்துடன் பிரதான கூட்டம் நடைபெறும் மண்டபம் பச்சை சிவப்பு மஞ்சள் நிறக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றும் நாளையும் நெடுந்தீவில் தங்கியிருப்பதுடன் அங்கு பல பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் மக்களது தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறியவுள்ளமை குறிப்பிடத்தக்கது.









Related posts:
|
|
|


