சிறப்பாக நடைபெற்றது மாவட்டபுரம் கந்தசாமி கோவில் முகவுத்தரத் தேர் பவளக்கால் நாட்டுவிழா – டக்ளஸ் எம்.பி பங்கேற்று சிறப்பிப்பு!
Sunday, January 20th, 2019
மாவிட்டபுரம் அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முகவுத்தரத் தேர் பவளக்கால் விழா இன்றையதினம் (20) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்நிகழ்வை முன்னிட்டு நடைபெற்ற சிறப்ப பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
கடந்தகால யுத்தம் காரணமாக முற்றாக சேதமடைந்த குறித்த ஆலயத்தின் தேர் மீள் கட்டுமாணம் செய்யும் முயற்சிகள் கோயில் நிர்வாகத்தினரால் முன்னெடுக்கப்பட்டது.
ஆனாலும் குறித்த கட்டுமாணப் பணிகளை முன்னெடுப்பதில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு ஆலய நிர்வாகத்தினரால் கொண்டுவரப்பட்டதை அடுத்த புதிய சிற்பத்தேர் கட்டுமாணம் முழுமையான நிலையை எட்டியது.
இந்நிலையில்குறித்த குறித்த தேருக்கான பவளக்கால் நாட்டும் விழாவை முன்னிட்டு காலை 7.30 மணிக்கு ஸ்நபனா அபிஷேகமும், 8.30 மணிக்கு விஷேட பூசை ஆராதனைகளும், 10 மணிக்கு பவளக்கால் உள்வீதி திரு ஊர்வலமும நடைபெற்று காலை 10.30 மணிக்கு பவளக்கால் நாட்டு விழா நடைபெற்றது.
இலங்கையிலுள்ள தேர்களிலேயே மிக உயரமான தேராகக் கருதப்படும் மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலின் முகவுத்தரத் தேரானது, 45 அடி உரமானதாக ஸ்தபதி கந்தசாமி இளங்கோவன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பவளக்கால் விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு, முருகப் பெருமானின் திருவருளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.















Related posts:
|
|
|


