நிரந்தர நியமனம் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாகாண சுகாதார தொண்டர்கள் கலந்தரையாடல்!

வடமாகாண சுகாதார தொண்டர்கள் மற்றும் மாகாண நீர் வடிகாலமைப்பு ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் ஆகியோர் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது வடமாகாணத்தில் யுத்தகாலத்திலும் யுத்தம் நிறைவடைந்த பின்னரான காலங்களிலும் வைத்தியசாலைகளில் சுகாதார தொண்டர்களாக பணிபுரிந்துவரும் தம்மை நிரந்தர நியமனத்தின் கீழ் உள்வாங்கப்படாமையானது தமக்கு மிகுந்த வேதனையை தருவதாக சுகாதாரத் தொண்டர்கள் டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டினர்.
இதேபோன்று நீண்டகாலமாக வட மாகாணத்தில் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் இதுவரையில் தாம் நிரந்தர நியமனத்திற்குள் உள்வாங்கப்படவில்லை என குறித்த சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் ஊழியர்கள் தெரிவித்தனர்
இருதரப்பினரது கோரிக்கைகளையும் அறிந்துகொண்ட டக்ளஸ் தேவானந்தா இது விடயம் தொடர்பாக துறைசார்ந்தோரிடம் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன்போது கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் உடனிருந்தார்.
Related posts:
|
|