நாட்டின் நலன்களுக்காக ஊடகங்கள் செய்யும் பங்களிப்பு வரவேற்கத்தக்கது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Tuesday, November 7th, 2017

நாட்டின் நலனையும், மக்களின் நலனையும் முன்னிறுத்தி ஜனநாயகத்தை இந்த நாட்டில் பலப்படுத்துவதற்காக ஊடகங்கள் செய்கின்ற பங்களிப்பை வரவேற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

சட்ட மூலங்களை திருத்துவதற்கான இரண்டாம் (2) ஆம் வாசிப்பு நிலை விவாதம் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

நீண்டகாலமாக, அசாதாரணமான சூழ்நிலைகள் காரணமாக வடமாகாணத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த புதுக்குடியிருப்பு, மற்றும் கரைதுறைப்பற்று என்று மக்களால் அறியப்படும் மரிட்டைம்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் தொடர்பிலான அறிவித்தல்கள், தேர்தல்களைப் பிற்போடுதல், நியமனங்களை அளித்துள்ள ஆட்கள் இறந்தமை, புலம் பெயர்ந்தமை, கட்சி மாறியுள்ளமை, முப்பத்தைந்துக்கு குறைந்த அபேட்சகர்கள் 35 வயதுக்கு மேற்பட்டவராகியுள்ளமை காரணமாக, இச்சட்டத்திருத்தம் அவசியமாகின்றது.

இவ்விசேட ஏற்பாடு சட்டம் புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான உள்ளு}ராட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு வழி செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

இவ்விசேட ஏற்பாட்டுச்சட்டத்தில் தமிழ்; மொழி பெயர்ப்பில் கரைத்துறைப்பற்றை மரிட்டைம்பற்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மரிட்டைம்பற்றை தமிழில் கரைத்துப்பற்று என்றே அப்பிரதேச மக்கள் அழைப்பதால் கரைத்துறைப்பற்று என்று அழைக்கப்படும் மரிட்டைம்பற்று என்ற ஆங்கிலச் சொற்பதத்திற்கு தமிழில் கரை துறைப்பற்று என்று திருத்தம் செய்யுமாறு அமைச்சர் அவர்களைக் கேட்டு கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்..

Related posts: