நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள் – வலி வடக்கு மக்கள் மத்தியில் டக்ளஸ் தேவானந்தா !

Sunday, December 24th, 2017

நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் எமது கட்சி சார்ந்த பணிகளும் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்; நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

காங்கேசன்துறை மாம்பிராய் பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா அங்கு மக்களை சந்தித்து கலந்துரையாடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் நிறைவுபெற்ற போதிலும் எமது மக்களின் காணிகள் இன்றும் விடுவிக்கப்படாத நிலை காணப்படுகின்றது.

தமது சொந்த இருப்பிடத்தை விட்டு வெளியேறி வெவ்வேறு இடங்களில் வாழும் மக்கள் படுகின்ற துன்ப துயரங்களை நான் நன்கறிவேன். நாம் எப்போதும் மக்களுடன் இருக்கின்ற காரணத்தால் மக்களின் அவலங்களையும் அவர்களுடைய ஏக்கங்களையும் நான் அனுபவரீதியாக கண்டுணர்ந்துள்ளேன்.

அந்தவகையில் கடந்தகாலங்களில் போலித்தேசியவாதம் பேசி காணிகளை விடுவிப்போம் அரசியல் கைதிகளை விடுவிப்போம் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உரிய தீர்வுகளை பெற்றுத்தருவோம் மற்றும் அரசியல் உரிமைப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுத் தருவோம் எனக் கூறி ஆட்சி மாற்றத்திற்கு முண்டு கொடுத்தவர்கள் எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஒன்றுக்காவது இதுவரையில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்கள் என கேட்டுக்கொள்ளவிரும்புகின்றேன்.

அவர்களால் கடந்தகாலங்களில் மட்டுமல்ல எதிர்காலங்களிலும் மக்களுக்கான சேவைகளை செய்வதற்கு திராணியோ அக்கறையோ அவர்களிடம் இல்லை என்பதை  சுட்டிக்காட்ட விரும்பகின்றேன்.

எனவே எமக்கு மக்கள் அரசியல் பலத்தை தரும்பட்சத்தில் மக்களி எதிரிகொள்ளும் பல பிரச்சினைகளுக்கு கடந்த காலங்களில் எவ்வாறு தீர்வுகளை பெற்றுக்கொடுத்தோமோ அதே போன்று வருங்காலத்திலும் எம்மால் தொடரமுடியும் என நான் உறுதிபடத் தெரிவிக்கின்றேன் அந்தவகையில்  நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்காலத்தை எதிர்கொள்ளுங்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவகையில் எமது கட்சி சார்ந்த பணிகளும் நிச்சயம் முன்னெடுக்கப்படும் என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

இந்த மக்கள் சந்திப்பின்போது தம்மில் பலருக்கு நிரந்தர காணிகள் இன்மையாலும் தமது பகுதிகளில் தமது காணிகள் இதுவரையில் கையளிக்கப்படாத நிலையில் தாம் நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் பல்வேறுபாட்ட அசௌகரியங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்துவருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்நிலையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினருக்கு வாக்களித்து அக்கட்சியின் வெற்றியில் தாமும் பங்கெடுக்க விரும்பவதாகவும் அந்த மக்கள் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலேற்பட்ட யுதாதம் காரணமாக இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் 1990 ஆம் அண்டு ஆடிமாதம் தமது பூர்வீக இடங்களிலிருந்து இடம்பெயர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த மக்கள் சந்திப்பில் வலிகாமம் வடக்கு பிரதேச கட்சியின் நிர்வாக செயலாளர ஜெயபாலசிங்கம் (அன்பு) உடனிருந்தார்.

Related posts: