“தோழர் 30” வரலாற்றை 30 மாலைகளை அணிவித்து கௌரவித்த நெடுந்தீவு மக்கள் – இது உணர்வுகளின் உறைவிடம் என அமைச்சர் டக்ளஸ் நெருடல்!
Sunday, August 11th, 2024
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தோற்கடிக்கப்பட முடியாத தமி்ழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றம் பிரதிநிதித்தும் செய்து 30 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு: நெடுந்தீவு மக்கள் அமைச்சரை பாராட்டிக் கௌரவித்து சிறப்பித்துள்ளனர். –
“நெடுவூர்த் திருவிழாவின்’ இறுதி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்ற்று சிறப்பித்திருந்தார். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வருகைதந்திருந்த அமைச்சருக்கு நெடுந்தீவு வாழ் மக்கள் இறுங்குதுறையில் வைத்து மாலை அணிவித்து வரவேற்பு நடனமாடி மகத்தான வரவேற்பளித்திருந்தனர்.
அதன்பின்னர் குறித்த நிகழ்வு மண்டபத்தில் வைத்து அமைச்சருக்கு அவரது நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் செய்த 30 ஆண்டுகள் நிறைவை நினைவுகூர்ந்த நெடுந்தீவு மக்கள் அதனை கௌரவித்து 30 மாலைகளை அணிவித்து நினைவு பரிசிலும் வழங்கி கௌரவித்தனர்.
இதனையடுத்த உரையாற்றிய அமைச்சர் நெடுந்தீவு பிரதேசமானது எனது உயிருடனும் உணர்வுகளுடனும் பின்னிப்பிணைந்த ஒன்று என தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அது தனது உறவுகளின் பிரதேசம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“மீண்டும் ஊருக்கு போகலாம்” என்னும் தொனிப் பொருளில் நெடுந்தீவின் நிலைபேறான அபிவிருத்தியை கருத்தில் கொண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள மாபெரும் நெடுவூர் திருவிழாவின் இறுதி நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தார்.
இதன்போது பிரதம விருத்தினர் உரையாற்றும்போது இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில் –
நாட்டின் ஏனைய பிரதேசங்களை விட அதிமுக்கியமான பிரதேசமாகும் ஏனெனில் இங்குள்ள மக்கள் ஒவ்வொருவரது உணர்வுகளிலும் எமது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் தன் சேவைகளும் பின்னிப் பிணைந்துள்ளது.
1990 ஆம் ஆண்டுகளின் ஆரம்பத்தில் தேசிய நீரோட்டத்தில் கலந்து கொண்டு நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்பதற்கான பயணத்தினை நாம் இங்கிருந்துதான ஆரம்பித்தோம்.
அதன் ஓர் அங்கமாகவே, நாம் இந்த நெடுந்தீவு மண்ணில் மக்களின் கோரிக்கையுடன் கால்பதித்து மக்களுக்கான சேவைகளை முன்னெடுத்திருந்தோம்.
அதேநேரம், ஏறத்தாழ மூன்று தசாப்தங்களாக தமிழ் மக்களினால் தொடர்ச்சியாக தெரிவு செய்யப்படுகின்ற மக்கள் பிரதிநிதியாக நான் இருக்கின்றேன். அதற்கு இந்த தீவக மக்களின் பங்களிப்பு அதிகமானதாக இருந்து வருகின்றது.
அதனடிப்படையில் இந்த மக்களின் கனவுகள் நிச்சயம் மெய்ம்படும் அத்காக நான் என்றும் உறுதுணையாக இருப்பேன்.
எம்மால் வளர்க்கப்பட்டு வருகின்ற தேசிய நல்லிணக்கம் காரணமாக பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண முடிந்தது. அதேபோன்று, எமது மக்களின் வாழ்வாதார எதிர்பார்ப்புக்களை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பங்களை நாம் உருவாக்கிக் கொள்வதும் அவசியமாகும்.
குறிப்பாக நெடுந்தீவு பிரதேசத்தில் சுற்றுலாத்துறையை விருத்தி செய்தல் மற்றும் பிரதேசத்தின் உட்கட்கமைப்பு வசதிகளை மேம்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையடப்பட்டுள்ளன.
அத்து்டன் பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கு அத்தியாவசியமான கடல் போக்குவரத்து, வீதிப் போக்குவரத்து, விவசாயம், கடற்றொழில், கால்நடை அபிவிருத்தி, நீர்பாசனம், உட்பட பல்வேறு விடயங்களுக்கான தீர்வுகள் தொடர்பிலும் என்னிடம் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
தற்போதும் பல கோரிக்கைகள் என்னிடம் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றையும் நிறைவேற்றித்தருவது தொடர்பில் நிச்சயம் நான் நடவடிக்கை மேற்கொள்வேன்.
இதேநேரம் எமது மக்கள் போதிய அரசியல் பலத்தினை எமக்கு வழங்குவார்களாயின், அவர்களின் அபிவிருத்தி மட்டுமல்லாது அரசியல் அபிலாசைகளையும் எம்மால் பெற்றுத்தர முடியும் என்ற யதார்த்தத்தையும் எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


