தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளின் உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்!
Sunday, July 30th, 2023
வலி வடக்கு, தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது, இன்று காலை திஸ்ஸ விகாரைக்கு விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைமுறைச் சாத்தியமான வழிமுறை ஊடாக படிப்படியாக மக்களின் அபிலாசைகளை வென்றெடுப்பதே தன்னுடைய எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.
அமைச்சரின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள், தமது காணிகள் கிடைக்கும் என்ன நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தனர்
000
Related posts:
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு கிளிநொச்சி நகரில் மகத்தான வரவேற்பு : ஆசிவேண்டி பிள்ளையார் கோவி...
அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு பல்கலைக் கழகங்களின் பட்டதாரிகளுக்கும் நியமனம் உறுதி: அமைச்சர் டக்ளஸ் த...
சர்வதேச சந்தைகளில் யாழ். வாழைப்பழம் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!
|
|
|


