தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

Wednesday, August 28th, 2024

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அனுமதியுடன் இன்றையதினம் (28) காலை இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், இணைத்தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான பி.எஸ்.எம்.சாள்ஸின் பிரசன்னத்துடன் யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன்  பங்குபற்றலுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.

இன்றைய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், முப்படை உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், அரச திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

000

Related posts:

குற்றச்சாட்டுகளை திசைதிருப்புவதில் முன்னின்று உழைத்தவர்களை காணாமற்போனோர் அலுவலகப் பணிகளில் ஈடுபடுத்த...
இந்திய மீன்பிடியாளர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன்...
கடற்றொழிலாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படாது. - அமைச்சர் டக்ளஸ் திட்டவட...

மலையக மக்களுக்கு மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் புதிய அதிகார சபை அமைய வேண்டும் - நாடாளுமன்றில் ட...
பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தாலும் பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி ம...
சவால்கள் மிகுந்த காலத்தில் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்தவர்கள் எமது மகளிர் அணி - ஈ.பி.டி.பியின் ...