திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்காக சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் பாராட்டு!

Sunday, December 5th, 2021

நாட்டில் திறமையான சுழியோடிகள் உருவாகுவதற்கு ஏதுவாக பயிற்சிகள் மற்றும் உபகரணங்கள் கிடைக்கும் வகையிலான சுழியோடிகளுக்கான நிலையத்தினை ஆரம்பித்திருக்கும் சுகந் இன்ரனாஷினல் நிறுவனத்திற்கும் அதன் உரிமையாளர்   அரவிந்தனுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

தன்னால்  மேற்கொள்ளப்பட்டு வருகின்ற கடலட்டை, சிங்கி இறால் போன்ற நீர்வேளாண்மை செயற்பாடுகளுக்கு குறித்த நிறுவனம் வழங்கி வருகின்ற ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

மட்டக்குளி, காக்கைதீவுப் பகுதியில் சுழியோடிகளுக்கு தேவையான அனுபவத்தினையும்  பயிற்சிகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள ‘சகந் டைவிங் சென்ரர்’ எனும் மையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்து உரையாற்றுகின்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts:

யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? - செயலாளர் நாய...
சாவகச்சேரி மகிழங்கேணி குடியேற்றக் கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில்...
தமிழ் மொழி பாடநூல்களில் காணப்படும் தவறுகளுக்கு இன்னும் தீர்வு வழங்கப்படாதிருக்கிறது - டக்ளஸ் எம்.பி....