தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Saturday, December 10th, 2016

எமது பாரம்பரிய தமிழ் தலைமைகள்  அகிம்சை போராராட்டத்தில் ஈடுபட்டார்கள். அந்த அகிம்சை போராட்டமானது சரியான முறையில்  தொடர்ச்சியாக, உறுதியாக முன்னெடுக்கப்பட்டது என்று  நான் கூற வரவில்லை.

சரியோ தவறோ அந்த அகிம்சை குரல்களுக்கு  அன்றைய அரசுகள் மதிப்பளித்திருந்தால்,  இலங்கைத்தீவு  இரத்தம் தோய்ந்த ஒரு தீவாக  மாறியிருக்காது. தவிர்க்க முடியாத சூழல் ஒன்றில் நாமும் அன்று  ஆயுதம் ஏந்தி போராட நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். ஆனாலும் எமது உரிமை போராட்டத்தை சிங்கள  சகோதர மக்களுக்கு எதிரானதாக நாம் ஒரு போதும்  வடிவமைத்திருக்கவில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வரவு செலவு திட்ட நிறைவுநாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவிதுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –

அன்றைய சூழலில் தென்னிலங்கையில் இருந்து  சாதகமான ஒரு சமிஞை காட்டப்பட்டிருந்தால்  முழு இலங்கை தழுவிய அரசியல் சமூக மாற்றத்திற்காகவே  நாம் அன்று ஒன்று பட்டு போராடியிருப்போம்.

எமது உரிமைப்போராட்ட வரலாற்றில்  இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எமது அரசியல் இலக்கு  நோக்கிய ஓர் ஏணிப்படியாக நாம் ஏற்றுகொண்டவர்கள்.

அதிலிருந்து எமது ஆயுதப்போராட்ட பாதையில்  தொலை தூர நோக்கில் நாம் சந்தி பிரித்து  ஜனநாயக வழிமுறையில் நாம் நடக்க தொடங்கியவர்கள் என தெரிவித்துள்ளார்.

15

Related posts: