தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது – தீர்வு தாருங்கள் என புதிதாக உள்வாங்கப்பட்ட அதிபர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விடம் கோரிக்கை!

அதிபர்களாக தரமுயர்த்தப்பட்டபோதும் உரிய நியமனங்களும், சேவையாற்றும் இடங்களும் வழங்கப்படாமல் வன்னியில் தொடர்ந்தும் குழப்பங்களோடு ஆசிரியர் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை (19) சந்தித்து தமக்கு நியாயத்தைப் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் குறித்த சந்திப்பு நடைபெற்றது.
இதன்போதே அவர்கள் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்
மேலும் பல வருடங்களாக ஆசிரியர்களாக வெளி மாவட்டங்களில் தாம் பணியாற்றிவந்த நிலையில் தமக்கு அதிபர் தரம் iii இற்கு உள்வாங்கப்பட்ட போதிலும் அந்த நியமனங்கள் வெளிமாவட்டங்களிலேயே வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் அதிகமாக வெளிமாவட்டங்களில் பணியாற்றிவரும் நிலையில் தற்போது அதிபர் தரத்திற்கு உள்வாங்கப்ட்டமையால் மீண்டும் வெளிமாவட்டங்களில் நாம் தொடர்ந்தும் பணியாற்றவேண்டிய நிலைக்க்கு தள்ளப்பட்டுள்ளோம்.
இதனால் தொடர்ந்தும் பல அசௌகரியங்களை நாம் எதிர்கொள்ளவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் இதற்கான தீர்வை பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
குறித்த ஆசிரியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் இது தொடர்பில் துறைசார் தரப்பினருடன் பேசி தீர்வு பெற்றுத்தர முயற்சிப்பதாக தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் –
நடைமுறையில் காணப்படும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினைகளே. ஆனாலும் அவற்றை தீர்ப்பதற்கான அக்கறையாளர்களை தமிழ் மக்கள் இன்றுவரை இனங்காணமையே அனைத்து பிரச்சினைகளும் தீரா பிரச்சினைகளாக இருப்பதற்கு காரணம். இன்னிலையிலிருந்து தமிழ் மக்கள் விடுபட்டு உண்மை நிலைலளை உணரவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
அவ்வாறான ஒரு விழிப்புணர்வு எமது மக்களுக்கு ஏற்பட்டு அதனூடாக அரசியல் அதிகாரங்கள் எம்து கரங்களுக்கு கிடைக்குமானால் இத்தகைய பிரச்சினைகள் அனைத்துக்கும் விரைவில் தீர்வு பெற்றுத்தருவேன் என்றார்.
Related posts:
|
|