தமிழர்களின் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும்,பொருளாதாரப் பிரச்சனைக்கும் தீர்வு வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, July 30th, 2018

தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட கொடிய யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான உழைக்கும் உறவுகளையும்,பாரம்பரியமான தொழில் வளங்களையும், ஈடற்ற சொத்துக்களையும் தமிழ் மக்கள் இழந்துள்ளார்கள். ஆகவே பெரும் பொருளாதாரச் சுமையோடும், மீளமுடியாத வறுமையோடும் தமிழ் மக்களின் வாழ்வு துயரமாக உள்ளது. இருந்தாலும், தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் உரிமைப் பிரச்சனைக்கும் நிலையானதும், சமத்துவமானதுமான அரசியல் தீர்வும்,பொருளாதாரத் தேவைகளுக்கும் சமகாலத்தில் தீர்வுகாணப்பட வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ச அன்மையில் கருத்துத் தெரிவித்திருந்தபோது, பொருளாதாரப் பிரச்சனைக்குத் தீர்வுகண்டால் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று தெரிவித்திருந்த கருத்து தொடர்பில் இன்றைய தினம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் “விடியும் வேளை” நிகழ்ச்சியில் கலந்து கொண்டுகருத்துத் தெரிவிக்கும்போதே செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

பொருளாதாரப் பிரச்சனைகளைத் தீர்த்தால், தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் தீர்ந்தவிடும் என்று தென் இலங்கையிலுள்ள சில அரசியல் பிரமுகர்களும் நீண்டகாலமாகக் கூறி வருகின்றார்கள். தமிழ் மக்களின் அபிலாஷைகளையும், உணர்வுகளையும் நிராகரிக்கின்றவர்களாகவே இவர்கள் கருதப்படுவார்கள். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், உணர்வுகளையும், அதிலுள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு தீர்வொன்றை வழங்குவதற்கு முன்வராதவர்களை தமிழ் மக்கள் நம்புவதற்குத் தயாராக இல்லை.

எம்மைப் பொறுத்தவரை அரசியல் உரிமைக்கான தீர்வும்,அபிவிருத்தியும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் பல தேவைகளுக்கான கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த காலத்தில் நாம் இணக்க அரசியல் எனும் பயணத்தை கடினமான பாதையில் முன்னெடுத்திருக்கின்றோம்.

ஆகவே எதிர்காலத்திலும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளையும், உணர்வுகளையும் முன்வைத்தே தென் இலங்கைத் தலைமைகளுடனான எமது அணுகுமுறைகள் அமையும் என்பதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுதியாகவே இருக்கின்றது என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

Untitled-2 copy

Related posts:

கொவிட் 19 காரணமாக தாமதமாகிய நந்திக்கடல் புனரமைப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நட...
கடற்றொழில் துறையை மேம்படுத்தும் ஒத்துழைப்புக்களை எதிர்பார்க்கின்றோம் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோ...
உயர்தரமாக தரமுயர்ந்தது ஊர்காவற்றுறை புனித மரியாள் றோ.க மகளிர் பாடசாலை – பாடசாலை சமூகம் அமைச்சர் டக்ள...