“டூனா” மீனுக்கு நிர்ணய விலை – முறையான கொள்கைத் திட்டம் அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பலநாள் படகு உரிமையாளர்கள் கோரிக்கை!

Thursday, March 14th, 2024

மீன் ஏற்றுமதியாளர்கள் தங்களது உற்பத்திகளுக்கு நியாயமான நிர்ணய விலையொன்றை வகுத்து அதனை செயற்படுத்த  வேண்டுமெனவும் அத்துடன் இதற்காக தேசிய கொள்கைத திட்டமொன்று  வகுக்கப்பட வேண்டுமெனவும் பலநாள்  மீன்பிடிப் படகு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சில் நேற்று (13ம் திகதி) கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற கலந்துiயாடலின் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

இது தோடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்ததாவது –

எரிபொருள் விலையேற்றம், ஐஸ் விலை அதிகரிப்பு, கடற்றொழில் உபகரணங்களின் விலை அதிகரிப்பு, வற் விரி விதிப்பு மற்றும் இடைத் தரகர்களின் தலையீடு காரணமாக தாங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் தங்களால் பிடிக்கப்படும்  டூனா மீன்களுக்கு ஆகக் குறைந்தது கிலோ ஒன்றுக்கு 2000 ரூபா விலை நிர்ணயிக்கப்படுவதுடன் இதன் பொருட்டு தேசியக் கொள்கையொன்று வகுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தனர்.

அத்துடன் எரிபொருளுக்காக விதிக்கப்படும் வற் வரியை திரும்பப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் திட்டங்கள் வகுக்கக்பட வேண்டுமெனவும் அதற்காக ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆழ்கடல் மீனவர்களுக்கிடையில் புரிந்துணரவு ஒப்பந்தமொன்று ஏற்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியதுடன் தற்போதைய சூழ்நிலையில் நூற்றுக் கணக்கான ஆழ்கடல் மீன் பிடிப்படகுகள் கடலுக்கு செல்வதில்லையெனவும் இதே நிலை தொடர்ந்தால் இத் தொழிலை கைவிட வேண்டிய நிலையேற்படுமெனவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடரந்து மீன் ஏற்றுமதியாளர்கள் தமது தரப்பில் தெரிவித்தாவது –

டூனா மீன் ஏற்றுமதி தொழில் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றது. மாலைதீவு மற்றும் இந்தியா போன்ற நாடுகள் தற்போது மீன்களை ஏற்றுமதி செய்கின்றன. அதனால் எமது மீனுக்கான கேள்வி குறைந்து விட்டதுடன் விலையும் குறைந்து விட்டது.

அத்துடன் அனுபவமிலாதவர்களும் இத் தொதழிலில் ஈடுபட்டு வருவதால் இத் தொழில் வீழச்சியடைந்து வருகிறது. எமது தொழிற்சாலைகளை மூட வேண்டிய நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.

எரிபொருள் விலை உயர்வு, ஐஸ் விலை அதிகரிப்பு, மின் கட்டணம் அதிகரிப்பு, டொலரின் பெறுமதி வீழ்ச்சி, விமான நிலைய தாமதக் கட்டணம் அதிகரிப்பு போன்றவற்றினால் நாங்களும் பதிக்கப்பட்டுள்ளோம்;. நூற்றுக் கணக்கான ஏற்றுமதிக் கம்பனிகள் இருந்தாலும் சில கம்பனிகள் மாத்திரமே செயறபடுகின்றன  என்றும்  சுட்டிக்காட்டியிரந்தனர்

இந்நிலையில்  கருத்து தெரிவித்த அமைச்சர் ;டக்ளஸ் தேவானந்தா -:

ஆழ்கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மற்றும் மீன் ஏற்றுமதியாளர்கள் ஆகிய இரண்டு தரப்பினாலும் முன் வைக்கப்பட்ட விடயங்களில் உள்ள நியாயங்கள் எனக்கு புரிகிறது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக இலங்கை முதலீட்டுச் சபை, உள்நாட்டு இறைவரித் திணைக்களம் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளுடன் பேசி நியாயமான முடிவு எட்டப்பட வேண்டும்.

அத்துடன் மீனவர்களும் ஏற்றுமதியாளர்களுக்கு தரமான மீன்களை விநியோகிக்கும் அதேவேளை ஏற்றுமதியாளர்களும் மீனவர்களிடமிருந்து நியாயமான விலையில் மீன்களை கொள்வனவு செய்யவேண்டும்.

குறிப்பாக முடிந்த வரையில் அவர்களிடமிருந்தே மீன்களை கொள்வனவு செய்ய வேண்டும். அத்துடன் செயலற்ற நிலையிலுள்ள மீன் ஏற்றுமதி கம்பனிகளின் அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்வது தொடர்பில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் – என்றும் தெரிவித்துள்ளார்

குறித்த சந்திப்பின்போது கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த, கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி நயனா குமாரி சோமரத்ன, இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி அனுஸாகோகுல, திணக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த, உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: