டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்!

Saturday, September 3rd, 2022

!
……….
டிக்கோவிற்ற மீன்பிடித் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, துறைமுகத்தின் செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டதுடன், துறைமுகத்தின் முகாமையாளர் உட்பட்ட அதிகாரிகளுடனும் கலந்துரையாடினார்.

நாட்டிற்கு  கடலுணவு ஏற்றுமதி ஊடாக கணிசமானளவு அந்நியச் செலாவணியை பெற்றுத் தருகின்ற பலநாள் மீன்பிடிக் கலன்களின் பிரதான இறங்குதுறையாக விளங்குகின்ற டிக்கோவிற்ற துறைமுகத்தில் காணப்படும்  குறைபாடுகள் தொடர்பாக, பலநாள் மீன்பிடிக் கலன்களின் உரிமையாளர்களினால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் இன்றைய அமைச்சரின் விஜயம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – 03.09.2022

Related posts:

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம்...
இந்தியாவில் சிக்கியிருந்தவர்களுடன் கட்டுநாயக்காவை வந்தடைந்தது முதலாவது விமானம் நாடு திரும்பியவர்கள் ...
கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடல்!