ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் நற்சான்று பத்திரத்தை வழங்கினார் இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா!

Friday, December 22nd, 2023

இலங்கைக்கான இந்தியாவின் புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்று பத்திரத்தை வழங்கியுள்ளார்.

நற்சான்று பத்திரம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. சந்தோஷ் ஜா, இலங்கைக்கான தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்திய தூதுவராக பணியாற்றினார்.

2019 ஜூலை முதல் ஜூலை 2020 வரை உஸ்பெகிஸ்தானில் இந்தியத் தூதராகவும் சந்தோஷ் ஜா பணியாற்றினார். 2017 ஜூலை முதல் 2019 ஜூன் வரை, வொஷிங்டன் டிசியில் உள்ள இந்தியத் தூதரகத்தில் தனிப்பட்ட தூதராகப் பணியாற்றினார்.

2010 முதல் 2013 வரை பிரஸ்ஸல்ஸில் உள்ள இந்திய தூதரகத்தில் துணைத் தூதராகவும் சந்தோஷ் ஜா செயல்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்றுமுதல் அவர் தமது பணிகளையும் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:


குடும்பதலைமைத்துவ மேற்றிருக்கும் பெண்கள் தொடர்பில் விஷேட செயற்திட்டம் அவசியம்! நாடாளுமன்ற உறுப்பின...
மக்களின் நம்பிக்கையை எவரும் வென்றெடுக்கவில்லை – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவ...
சஜித் பிரேமதாஸாவின் கருத்து கடந்த ஆட்சியின் தவறை மறைக்கும் முயற்சியென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்...