ஜனாதிபதியுனான சந்திப்பில் முக்கிய விடயங்கள் ஆராய்வு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, December 22nd, 2022

நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் தரப்புக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இடம்பெற்ற இரண்டாவது சந்திப்பு சுமூகமாக இடம்பெற்றதுடன் சில முடிவுகளும் எட்டப்பட்டதாக ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அரசியல் கைதிகள் விடுவிப்பு, தனியார் காணிகளை கையளித்தல் மற்றும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவு செய்யவதற்கான ஆரம்பமாக 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்ப்படுத்துவதற்கான சூழலை உருவாக்குதல் போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளன

அத்துன் எதிர்வரும் 5 ஆம் திகதி மீண்டும் சந்தித்து, குறித்த விடயங்களை விரைவுபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது

Related posts:


வழி முறைகள் ஒவ்வொன்றும் தமிழ் மக்களது நிரந்தர விடியலுக்கானதாகவே அமையவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ...
அந்நியச் செலாவணியில் பெரும் பங்களிப்பு செய்யும் மலையக மக்களுக்கு அனைத்து உரிமைகளும் உறுதிசெய்யப்பட வ...
வடக்கில் மண்ணெண்ணை பிரச்சினைக்கு முதற் கட்டத் தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திட்ட வரைபு!