சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை  –  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, November 24th, 2016

கடந்த 1990, 1991, 1992, 1993 போன்ற காலகட்டங்களில் தொடரணி என்ற ரீதியில் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்ட சுமார் 4000இற்கு மேற்பட்டோர் அக்காலகட்டம் முதல் யுத்தம் முடிவுக்கு வரும்வரையில் யுத்தம் நிலவிய பகுதிகளில் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.  எனினும், இவர்கள் இன்னும் பதவியுயர்வுகள் எதுவுமின்றி  (police constables.) ஆகவே தொடர்ந்தும் சுமார் 25 வருடங்களுக்கு மேலாகப் பணியாற்றி வருவதாகத் தெரியவருகின்றது. இவர்களது பதவி உயர்வகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

குறித்த பொலிஸாரில் பலர் யுத்த காலகட்டத்தில் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டனர்.  அந்த வேளையில் அவர்களுக்கு ஒரு தொகை நஷ்டஈடு வழங்கப்பட்டது.  எனினும்,  வேறு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லையென்று தெரியவருகின்றது.

தற்போதுள்ள நடைமுறைக்கிணங்க மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குப் பின்னர் அதாவது 2000ஆம் ஆண்டளவில் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டோருக்கே 15 வருட சேவைக்காலத்தினைக் கருத்திற்கொண்டு பதவியுயர்வுகள் உட்பட இதர சலுகைகளும் வழங்கப்படுவதாகத் தெரியவருகின்றது.

எனவே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டு மேற்படி பொலிஸாருக்கு உரிய பதவி உயர்வுகளை வழங்குவதற்கேற்ற கொள்கைத்திட்டம் ஒன்றினையும் வகுக்கவேண்டுமென்றும் கேட்டுக் கொள்கின்றேன் என மேலும் தெரிவித்துள்ளார்.

05

Related posts:

நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!
இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் - யாழ்ப்பாணத்தி...