சுயதொழில் துறைகளை ஊக்குவிக்க நாம் உறுதுணையாக இருப்போம் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 14th, 2017

சுயதொழில் துறைகளை வளர்த்தெடுப்பதனூடாகவே மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்றும் அதற்கேற்றவகையில் மக்கள் துறைசார்ந்த தொழில்துறைகளை இனங்கண்டுகொள்ளவேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கு இன்றையதினம்(14) விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தா அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.

அங்கு வருகைதந்திருந்த மக்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போது- மக்ளின் பொருளாதார மேம்பாடு என்பது அவர்கள் சார்ந்து வாழுகின்ற கிராமங்களின் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்கள் மூலமே மேம்பாடுகண்டுவருகின்றது. கிராமங்களில் கிடைக்கின்ற உள்ளூர் வளங்களைப் பயன்படுத்தி அவற்றை மூலப்பொருளாகக்கொண்டு உற்பத்திகளை மேற்கொண்டு சிறந்த முடிவுப்பொருட்களை உற்பத்திசெய்யவேண்டும்.

இவ்வாறு உற்பத்திசெய்யப்படும் பொருட்களுக்கு உரிய சந்தைவாய்ப்பினை பெற்றுக்கொள்ளும் போது அதனூடாகக் கிடைக்கப்பெறும் வருமானம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு   அமையும்.
எனவே சுயதொழில்வாய்ப்புக்களை பலப்படுத்தி வளப்படுத்தி கிராமங்களினதும் மக்களினதும் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் நாம் தொடர்ந்தும் அயராது பங்களிப்பினை வழங்க தயாராக இருக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.

இதன்போது கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம், கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் திலீபன், கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் சிவகுரு பாலகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts:


உணர்வுகளுக்கு மதிப்பளித்தே எனது தீர்மானங்கள் அமையும் – போராட்டத்தை முன்னெடுத்திருந்த கடற்றொழிலாளர்கள...
வடக்கு தமிழ் மக்களை இந்தியா மறந்து விடவில்லை என்பதன் எடுத்துக்காட்டே இந்த மனிதாபிமான உதவிகள் – அமைச்...
அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை - தீபாவளி தினத்தன்று மின் துண்டிக்கப்படாதென மின்சார சபை அறிவிப்பு!